Recent Updates Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • என். சொக்கன் 5:52 pm on February 17, 2023 Permalink | Reply  

    நூல் வெளியீடு: என். சொக்கன் எழுதிய நாலு வரி நோட்டு மறுபதிப்பு 

    என். சொக்கன் எழுதிய ‘நாலு வரி நோட்டு’ கட்டுரைத் தொகுப்பு இப்போது புதிய மறுபதிப்பாக வெளியாகியுள்ளது. திரைப்படப் பாடல்களின் வழியாகக் கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் இலக்கணம், கொஞ்சம் பண்பாடு, கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் அறிவியல் என்று இன்னும் பலவற்றைச் சுவையாக அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆர்வமுள்ளோர் இங்கு க்ளிக் செய்து அதை வாங்கிக்கொள்ளலாம்.

    இந்த நூல் மின்னூல் (Kindle eBook) வடிவத்திலும் கிடைக்கிறது. அதை வாங்குவதற்கு இங்கு கிளிக் செய்யுங்கள்.

    என். சொக்கன் எழுதிய மற்ற அச்சு நூல்களைக் காண, இங்கு கிளிக் செய்யுங்கள்.

    என். சொக்கன் எழுதிய மற்ற மின்னூல்களைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

    #Amazon #Kindle #eBook #eBooks #AmazonKindle #மின்னூல் #மின்னூல்கள் #மின்புத்தகம் #மின்புத்தகங்கள் #அச்சுநூல் #அச்சுநூல்கள் #printbooks #nchokkan #என்சொக்கன் #nchokkanbooks #nchokkanebooks #4varinote #4வரிநோட்டு #நாலுவரிநோட்டு

    (Note: Some of the links above are affiliate links)

     
  • என். சொக்கன் 4:24 pm on June 29, 2021 Permalink | Reply  

    மின்னூல் வெளியீடு: என். சொக்கன் எழுதிய நாலு வரி நோட்டு 

    என். சொக்கன் எழுதிய ‘நாலு வரி நோட்டு’ கட்டுரைத் தொகுப்பு இப்போது அமேசான் கிண்டில் தளத்தில் மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. திரைப்படப் பாடல்களின் வழியாகக் கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் இலக்கணம், கொஞ்சம் பண்பாடு, கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் அறிவியல் என்று இன்னும் பலவற்றைச் சுவையாக அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆர்வமுள்ளோர் இங்கு க்ளிக் செய்து அதை வாங்கிக்கொள்ளலாம்.

    நாலு வரி நோட்டு: திரைப்படப் பாடல்களின் வழியாகக் கொஞ்சம் இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வரலாறு, அறிவியல், இன்னும் பல... (Tamil Edition) by [என். சொக்கன் N. Chokkan]

    என். சொக்கன் எழுதிய மற்ற மின்னூல்களைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

    #Amazon #Kindle #eBook #eBooks #AmazonKindle #மின்னூல் #மின்னூல்கள் #மின்புத்தகம் #மின்புத்தகங்கள் #nchokkan #என்சொக்கன் #nchokkanbooks #nchokkanebooks #4varinote #4வரிநோட்டு #நாலுவரிநோட்டு

    (Note: Links above are affiliate links)

     
  • என். சொக்கன் 10:28 am on July 9, 2020 Permalink | Reply  

    என். சொக்கன் இணையத் தளம் 

    nchokkan.com என்கிற என்னுடைய புதிய தளம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ச்சியாகக் கட்டுரைகள், வலைப்பதிவுகளை எழுதிவருகிறேன்.

    ஆர்வமுள்ள நண்பர்கள் nchokkan.comக்கு வருகை தருமாறு வேண்டுகிறேன். நன்றி.

    என். சொக்கன்

     
  • ranjani135 10:31 am on February 11, 2015 Permalink | Reply  

    உங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது. நேரம் இருக்கும்போது வந்து பார்க்கவும்.
    http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_11.html

     
  • mokrish 10:58 am on December 2, 2013 Permalink | Reply  

    நதிபோல ஓடிக்கொண்டிரு 

    திரைப்படத்தில் பாடல்கள் அவசியமா? இசையும் கவிதையும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு தேவையற்ற இடையூறா? சுஜாதா ‘டிவியில் பாடல் ஓடிக் கொண்டிருக்கும் போது mute பட்டனை அழுத்தி விட்டுக் கவனியுங்கள். சிரிப்பு வரும் என்று எழுதியிருந்தார்.

    பாடல்கள் எப்படிப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே சரியான கேள்வி. ஒரு திறமையான கலைஞன் பாடல்களை கதையில் அழகாக நெய்துவிட முடியும். மகாநதி என்று படத்தின் டைட்டில். கதையின் பாத்திரங்களுக்கு கிருஷ்ணா, காவிரி, யமுனா, பரணி என்று நதிகளின் பெயர். கதை திருநாகேஸ்வரத்தில் தொடங்கி சென்னை, கொல்கத்தா என்று அலைந்து சென்னையில் முடியும். இதில் பாடல்களை எங்கே எப்படி கொண்டு வரவேண்டும்?

    வாலி ஸ்ரீரங்கத்துக்காரர். காவிரி நதியை ஒரு கதாபாத்திரமாகவே உருவாக்குகிறார். படத்தின் பெரும்பான்மையான பாடல்களில் கதையின் ஒட்டத்தோடு காவிரி பற்றிய reference. ராஜா ஒரு அற்புதமான இசை இழை தருகிறார். திரைக்கதையுடன் கைகோத்து வலம் வரும் பாடல்கள்.

    முதலில் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடும் பாடல் கங்கையின் மேலான காவிரியின் பெருமை சொல்லும் பாடல் (பாடியவர்கள் சித்ரா & குழுவினர்)

    http://www.youtube.com/watch?v=wwzL-BhmVMw

    தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
    வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
    இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
    இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

    நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி

    நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

    அடுத்து விதிவசத்தால் சொந்த மண்ணை விட்டு விலகி சென்னை வந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும்போது, பிரிந்து போகும் குழந்தையை ஒரு தாய் வழி அனுப்புவது போல காவிரி நதி நாயகனை வாழ்த்தும் வரிகள் (பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்)

    http://www.youtube.com/watch?v=D2PyGX_K6IQ

    அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும்

    நீங்காமல் உன்னைச் சுற்றும் எண்ணங்கள் எந்நாளும்

    ஐயா உன்கால்கள் பட்ட பூமித்தாயின் மடி

    எங்கேயும் ஏதும் இல்லை ஈடு சொல்லும் படி

    காவேரி அலைகள் வந்து கரையில் உன்னைத் தேடிடும்

    காணாமல் வருத்தப் பட்டுத் தலை குனிந்து ஓடிடும்

    ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும் வேரு விட்ட இடம்

    இதை விட்டால் உன்னை வாழ வைப்பது வேறு எந்த இடம்

    தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம் பறந்து போகுதடி

    தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை மறந்து போகுதடி

    இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு கோலமிட்டதடி

    இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும் காலம் விட்ட வழி

    சென்னையில் அவனுக்கு நிறைய சோதனைகள். செய்யாத குற்றத்துக்கு சிறைவாசம். ஆனால் அவன் தளரவில்லை என்ற வரிகளிலும் காவிரி ! (பாடியவர் கமல்ஹாசன்)

    http://www.youtube.com/watch?v=VAzrswll0oQ

    தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாளும் தாழாது

    செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது

    காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி

    காற்றாடி போலருந்து வீழ்வதில்லையடி

    அன்பான உறவு கண்டு கூடு கட்டி ஆடுவேன்

    அன்னாளில் நானிருந்த வாழ்க்கையைத் தான் தேடுவேன்

    அன்று சொன்னான் பாரதி சொல்லிய வார்த்தைகள் தோற்றதில்லையடி

    எந்தன் எண்ணம் என்றைக்கும் தோல்வி என்பதை ஏற்றதில்லையடி

    நதியில் விழுந்த இலை போல திக்கு திசை தெரியாமல் ஓடி பல சோகம் கண்டு ஒருவழியாக வெளிவரும் நிலையில் ஒரு அற்புதமான பாடல் (பாடியவர் கமல்ஹாசன்)

    http://www.youtube.com/watch?v=2H6CaBpol80

    எங்கேயோ திக்கு திசை எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான்

    அம்மாடி வந்ததென்ன என் வாழ்கை ஓடம்தான்

    காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி

    காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி

    இரு கண்ணே செந்தமிழ் தேனே தந்தையின் பாசம் வென்றதடி

    பசும் பொன்னே செவ்வந்தி பூவே இத்துடன் சோகம் சென்றதடி

    ஒவ்வொரு பாடலிலும் காவிரி பற்றி ஒரு குறிப்பு. முதல் பாடலில் வளம் தரும் மகாநதி. அடுத்த பாடலில் வாழ்த்தி வழியனுப்பும் தாய் போல என்கிறார். இன்னொரு பாடலில் காவிரி மடியில் வாழ்ந்தவர் வீழ்வதில்லை என்கிறார். காவிரி தீரம் விட்டு வந்து பட்ட சோகம் சொல்கிறார். ஆனால் எல்லா பாடல்களிலும் முடிவில் ஒரு நல்ல வாக்கு. ஒரு பாசிடிவ் கருத்து. கதை சொல்லலில் பாடலையும் இணைக்கும் நயம்.

    நதியிடம் நமக்கு நிறைய பாடங்கள் கிடைக்கும். நதி இலக்கை மறப்பதேயில்லை. கழிவுப் பொருட்களைக் கலந்தாலும், எல்லா தடைகளையும் மீறி ஓடிக்கொண்டேயிருக்கும். In the confrontation between the stream and the rock, the stream always wins, not through strength but by perseverance என்று சொல்வார்கள். வாழ்க்கையும் அப்படியேதான்.

    அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன்

    மோகனகிருஷ்ணன்

    365/365

     
    • amas32 6:52 pm on December 2, 2013 Permalink | Reply

      வாழ்த்துகள் மோகனகிருஷ்ணன், ராகவன், சொக்கன். #365 வேள்வியை பிராமாதமாக முடித்ததற்கு பாராட்டுகள் 🙂

      மகாநதி படத்தில் இந்த நதி பற்றிய thread இருப்பது நீங்கள் சுட்டிக் காட்டும் வரை நான் கவனித்தது இல்லை. மிக்க நன்றி. படம் முழுதும் நதியையும் கதையோடு ஓடவிட்டதில் வாலியின் திறமை மிளிர்கிறது. தஞ்சை திருச்சி மாவட்ட மக்களுக்குக் காவேரியைப் பற்றி பேசும்போது பெருமை பிடிபடாது 🙂

      ரிதம் படத்தில் நதியே நதியே காதல் நதியே பாடலும் சிறந்த கருத்தைச் சொல்லும் பாடல்.

      உங்கள் மூவருக்கும் பல்லாண்டு பல்லாண்டு பாடி அமைகிறேன் :-))

      amas32

    • uma chelvan 6:56 pm on December 2, 2013 Permalink | Reply

      excellent post !!!

      தன்மானம் உள்ள நெஞ்சம் என்னாளும் தாழாது

      செவ்வானம் மின்னல் வெட்டி மண்மீது வீழாது

      In the confrontation between the stream and the rock, the stream always wins, not through strength but by perseverance………………………Beautiful Wordings both in Tamil and English.

      Godd Luck !!!!

    • krish 12:32 pm on August 12, 2014 Permalink | Reply

      excellant

  • G.Ra ஜிரா 8:07 pm on December 1, 2013 Permalink | Reply  

    விண்ணெங்கும் காத்தாடிகள் 

    புண்ணாகவராளி இராகத்தில் ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா என்ற பாடலை ரெக்கார்ட் பிளேட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு உள்ளமுருக முருகனைப் பாடிக் கொண்டிருந்தார் டி.எம்.சௌந்தரராஜன்.

    ஆறுதலைக் கூட ஆறுதலைச்சாமி தான் தர வேண்டுமோ? அதென்ன அவ்வளவு எளிதாகக் கிடைக்காத ஒன்றா?

    யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். உழைப்போ அதிர்ஷ்டமோ பணத்தைக் கொடுத்து விடுகிறது. அந்தப் பணம் இருந்தால் உணவு உடை உறைவிடம் என்று பலவற்றை வாங்க முடிகிறது. பணத்தைப் பார்த்து காதலும் கூட வந்துவிடுகிறது. ஆனால் மனதுக்குத் தேவையான ஆறுதல்!!!!!!

    ஆறுதல் எல்லோரிடமும் கிடைப்பதில்லை. ஏனென்றால் ஆறுதலளிக்க எதையும் எதிர்பார்க்காத உண்மையான அன்பு வேண்டும்.

    அப்படி ஆறுதல் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர் தான் மலைச்சாமித் தேவர். ஊரிலேயே பெரிய தலைக்கட்டு. மச்சு வீடு. நிலம் நீச்சு. எட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்து. பெரிய கவுரவம் தான். ஆனால் நிம்மதி மட்டும் தான் இல்லை.

    பதிவிரதை ஏறுமாறாக இருப்பாளேயாமாகில் கூறாமல் சன்னியாசம் கொள்” என்று ஔவையார் சொன்னது மலைச்சாமித் தேவருக்கு நன்றாகவே பொருந்தும். என்ன செய்வது? கவியரசர் சொன்னது போல இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று.

    சோகத்துக்கு ஒரு இயல்புண்டு. யாரிடமாவது சொல்லிவிட்டால் அது குறைந்துவிடும். ஆனால் ஊரெல்லாம் வந்து நியாயம் கேட்கும் தலைக்கட்டு யாரிடம் போய்ச் சொல்ல முடியும்?

    அதற்கு ஒரே வழி உள்ளத்து உணர்வுகளை பாட்டாக்கி காற்றோடு காற்றாய் கலந்து விடுவதான். அந்த வழியில்தான் மலைச்சாமித் தேவரும் போனார்.

    பூங்காத்து திரும்புமா
    ஏம் பாட்ட விரும்புமா
    தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
    எனக்கொரு தாய்மடி கெடைக்குமா

    அவர் பாட்டுக்கும் ஒரு எதிர்ப்பாட்டு வருகிறது. அதுவும் தேடிக் கொண்டிருந்த ஆறுதலைத் தாங்கிக் கொண்டு.

    ராசாவே வருத்தமா
    ஆகாயம் சுருங்குமா
    ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
    அடுக்குமா சூரியன் கருக்குமா

    பாடியது ஆளோ அசரீரியோ… இப்படியான ஆறுதலைக் கேட்பதற்கு இரண்டு காதுகள் இருந்தால்… இல்லை இல்லை. ஒரு காது இருந்தாலே போதுமே. வேதனைப் பட்ட உள்ளம் உள்ளதையெல்லாம் கொட்டி அழுதிடுமே!

    என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
    மெத்த வாங்குனேன் தூக்கத்த வாங்கல

    வேதனை இல்லாத மனம் ஏது? வாதை இல்லாத உடல் ஏது? குறையே இல்லாத மனிதர் தான் யார்? அதைப் புரிய வைத்தால் அவர் மனம் தெளியும் என்று நம்பினாள் அவள்.

    இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
    உன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

    தனக்காகப் பாடும் அந்தக் குரல் யார் குரல் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உந்துகிறது. அது பாட்டிலேயே கேள்வியாகவும் வருகிறது.

    யாரது போறது?

    ஆனால் அவள் கெட்டிக்காரி. அவளா முகத்தைக் காட்டுவாள்?

    குயில் பாடலாம். தன் முகம் காட்டுமா?

    இப்படி வரிவரியாகச் சோகத்தை அவர் சொல்லவும் ஆறுதலை இவள் சொல்லவும் பாட்டு தொடர்கிறது.

    எப்போதும் இல்லாத ஒரு மகிழ்ச்சி. என்றைக்குமே தோன்றியிருக்காத ஒரு நிம்மதி. அனுபவித்தேயிருக்காத ஒரு இன்பம். மலைச்சாமித் தேவருக்கு மட்டுமல்ல… அவளுக்கும் தான். சுகராகம் சோகம் என்றால் ஆறுதல் ஆனந்தம் தான்.

    மறுபடியும் ஆசை உந்தக் கேட்டு விடுகிறார் தேவர். அந்தப் பெண்ணும் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். அவள் குரல் மட்டுமல்ல பெயரும் குயில்தான்.

    இந்தச் சின்னப் பெண்ணா பெரிய சோகத்துக்கு மருந்து தடவிய குயில் என்று அவர் உள்ளம் வியக்கிறது. குரலில் என்றுமில்லாத ஒரு மகிழ்ச்சியோடும் நெகிழ்ச்சியோடும் கேட்கிறார்.

    அடி நீதானா அந்தக் குயில்
    யார் வீட்டுச் சொந்தக் குயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததே ஒலகமே மறந்ததே

    எங்கேயோ இருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத இரண்டு உள்ளங்களுக்குள் ஒரு இணைப்பு கொண்டு வருவதற்கு எத்தனையெத்தனையோ காட்சிகளும் நிகழ்ச்சிகளும் தேவை. அதிலும் சில தவறாகப் போய்விடுவதும் உண்டு.

    அப்படியெல்லாம் ஆகாமல் சோகத்துக்குத் தேவையான ஆறுதலைக் கொடுத்து மனக்காயங்களை ஆற்றி இரண்டு உள்ளங்களுக்கு இடையே பாலம் போட்ட இந்தப் பாடல் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.

    பாடல்கள் அழகிய அபத்தமாம். அப்படிச் சொல்வதுதான் அசிங்கமான அபத்தம். எத்தனையோ பக்கங்களில் பேசியிருக்க வேண்டிய வசனத்தை இருபது வரிகளில் கவிதையாக்கி சோக நெஞ்சங்களுக்கெல்லாம் ஆறுதல் தந்த பாடலுக்கு நன்றி பல. இந்தப் பாடல் இல்லாமல் முதல் மரியாதை என்ற படமே இல்லை.

    நன்றாக யோசித்துப் பார்த்தால் தமிழ் திரைப்படம் தொடங்கிய காலத்திலிருந்து எத்தனையெத்தனை பாடல்கள்! எத்தனையெத்தனை கவிஞர்கள் புலவர்கள் பாடலாசிரியர்கள்! எத்தனையெத்தனை இசையமைப்பாளர்கள்! அவர்கள் உருவாக்கித் தந்த பல பாடல்கள் படத்தோடு காணாமல் போகாமல் நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் மிகையாகாது.

    தெலுங்கில் “எந்தரோ மகானுபாவுலு.. அந்தரிக்கி வந்தனம்” என்று சொல்வார்கள். நமது தமிழில் சொன்னால், “எத்தனையோ பெரியவர்கள். அவர்கள் அனைவருக்கும் வணக்கம்.” நமக்காக ஆயிரமாயிரம் பாடல்களை உருவாக்கிய அந்தப் பெரியவர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

    பாடல் – பூங்காற்று திரும்புமா
    வரிகள் – கவிஞர் வைரமுத்து
    பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
    இசை – இசைஞானி இளையராஜா
    படம் – முதல் மரியாதை
    பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=-9kaLJZhJIE

    அன்புடன்,
    ஜிரா

    364/365

     
    • Uma Chelvan 9:35 pm on December 1, 2013 Permalink | Reply

      மிகவும் நல்ல பதிவு. படிப்பு, பணம், புகழ், வசதி, வாய்ப்புகள் என்று எல்லாம் வந்த பின்பும் மனித மனம் வேண்டுவது அன்பும் ஆறுதலும் தான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும்…….பக்தியாய் இறைவனிடம், அன்பாய் மனைவியிடம், பாசமாய் மகள், மகனிடம், நேசமாய் உறவுகளிடம், உரிமையாய் நட்பிடம்……… அனைவர்க்கும் அன்பையும் ஆறுதலையும் அந்த ஆறுமுகன் அருளட்டும்.

      அறுமுகனை வேண்டி ஆரதனை செய்தால் அருகினில் ஓடி வருவான் .அன்பு பெருகியே அருள் தருவான்.!!!

    • Uma Chelvan 9:50 pm on December 1, 2013 Permalink | Reply

      மிகவும் நன்றி ” 4 வரி நோட்” குழுவினர்க்கு. ஓர் ” சங்கீத மும்மூர்த்திகள்”. போல நிறைய பாடல்களை பற்றிய அருமையான கருத்துக்கள். நிறைய புது விஷயங்கள் கற்று / தெரிந்து கொண்டேன். “யாம் அறிந்த மொழிகளிலே..தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதி!!. கம்பனை போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல், பாரதியை போல்…….. ராஜாவை போல் என்னுமிடத்தில் நிறுத்த விழைகிறேன்/ விரும்புகிறேன்.

    • rajinirams 2:37 am on December 2, 2013 Permalink | Reply

      அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை-கவியரசரின் நெஞ்சை வருடும் வரிகள் போலவே கவிஞர் வைரமுத்துவின் முதல் மரியாதை வரிகள்- ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா,ஏங்காதே அத உலகம் தாங்காதே-அடுக்குமா சூரியன் கருக்குமா. அருமையான பாடலின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு.

    • Uma Chelvan 8:08 am on December 2, 2013 Permalink | Reply

      காதில் பஞ்சாமிர்தமும், காற்றில் வரும் இசைவிழாவும் ( December Music Season)

      ராகத்தைச் சொல்லி விட்டுப் பாடுவது !!

      இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால், பாடி முடித்ததும், ஒரு வரி அதே ராகத்தில் பிரபலமாகி இருக்கு திரைப்பட இசைப் பாடலை பாடிக் கோடி காட்டி விட்டுத் தொடரலாம். கரகோஷம் அள்ளும்.

      வெகுஜன இசையையும், சம்பிரதாய் இசையையும் இணைத்துப் பாலம் போட்டுக் கொண்டே இருக்கும் இளையராஜா போன்ற இசை மேதைகளுக்கு சபா சங்கீதம் செலுத்தும் மரியாதையாக அது இருக்கும்.

      EraMurukan Ramasami

    • amas32 7:20 pm on December 2, 2013 Permalink | Reply

      பூங்காத்து திரும்புமா அற்புதமான ஒரு பாடல். கேட்டு முடித்த பிறகும் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கும்.

      //அடி நீதானா அந்தக் குயில்
      யார் வீட்டுச் சொந்தக் குயில்
      ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
      பறந்ததே ஒலகமே மறந்ததே//

      அருமையான வரிகள்.

      amas32

    • Sudharsan 2:15 pm on December 13, 2013 Permalink | Reply

      Nalla Pathivu. 4varinote arumayana muyarchi.

      Siru Thirutham:
      “பாராட்ட மடியில் வெச்சுத் தாலாட்ட” .

  • என். சொக்கன் 11:13 pm on November 30, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள் 

    முன்பெல்லாம் நம் தமிழ் திரைப்படங்களில்  குழந்தைகளுக்கு நாயகர்கள் அறிவுரைக் கருத்துகளைக் கூறும் பாடல்கள் நிறைய இடம் பெறும். அந்தப் பாடல்களில் உள்ள நற்கருத்துகள் பல பிஞ்சு மனங்களில் பசுமரத்தாணிபோல பதிந்து நல்வாழ்விற்கு வழிவகுக்கும் ஆற்றல் கொண்டவை. அது போன்று பல பாடல்கள் வந்திருந்தாலும் என்றும் மனதில் நிற்கும் சில பாடல் வரிகள்:
    “பாலுட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்-அறிவூட்டும் தந்தை நல்வழி காட்டும் தலைவன்
    துணையாக கொண்டு நீ நடைபோடு இன்று-உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று”
    கிளி போல பேசு இளங்குயில் போல பாடு-மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
     மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்-மெய்யான அன்பே தெய்வீகமாகும்”
    : இது காவியக்கவிஞர் வாலியின் எளிமையான சக்தி மிகுந்த வரிகள் கொண்ட “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”பாடல்.
    அடுத்து கவியரசர் கண்ணதாசன் எழுதிய வரிகளை பாருங்கள்:
    “அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை-தருமம் செய்யுங்கள்
       அன்பே தெய்வம் என்றார் பெரியோர் -அன்புடன் வாழுங்கள்
      யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்
       யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
      நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே”!

    எப்படிப்பட்ட வரிகள் பாருங்கள், “தங்கங்களே நாளை தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள்”பாடல்.

    அடுத்து  கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகள்-
    குழந்தைகளுக்கு யானை,குரங்கு”கதையை கூறி “வினை விதைத்தவன் வினை அறுப்பான்-திணை விதைத்தவன் திணை அறுப்பான்,நன்மை ஒன்று  செய்தீர்கள் நன்மை விளைந்தது-அட தீமை ஒன்று செய்தீர்கள் தீமை விளைந்தது-தீமை செய்வதை விட்டு விட்டு நன்மை செய்வதை தொடருங்கள்”என்று எளிமையாக அறிவுறுத்தும் “ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம்”..
    புதிய இயக்குனர்களும் தங்கள் படங்களில் இது போன்ற நல்ல கருத்துக்களை தங்கள் படங்களில் புகுத்துவது ஆரோக்கியமான வளர்ச்சியாக அமையும். நன்றி
    பதிவில் இடம் பெற்ற பாடல்கள்:
                                                                                பாடல்:             நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
                                                                                படம் ”              நம் நாடு
                                                                                எழுதியவர்:   கவிஞர் வாலி
                                                                                இசை :             கே.வி. மகாதேவன்
                                                                                 பாடியவர்:      டி.எம்.சௌந்தர்ராஜன்
                                                                                 சுட்டி :                http://youtu.be/Th9bUtTIRGY
                                                                                 பாடல்:             தங்கங்களே நாளை தலைவர்களே
                                                                                 படம் :                என்னைப்போல் ஒருவன்
                                                                                 எழுதியவர்:     கவியரசர் கண்ணதாசன்
                                                                                  இசை:                எம்.எஸ்.விஸ்வநாதன்
                                                                                  பாடியவர் :        டி.எம்.சௌந்தரராஜன்
                                                                                  சுட்டி:                  http://youtu.be/6FQEFdXE3Io
                                                                                  பாடல்:                ராஜா சின்ன ரோஜாவோடு
                                                                                   படம்:                   ராஜா சின்ன ரோஜா
                                                                                   எழுதியவர்:       கவிஞர் வைரமுத்து
                                                                                    இசை:                  சந்திரபோஸ்
                                                                                    பாடியவர்கள்:   எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்
                                                                                     சுட்டி:                    http://youtu.be/w9O4sdhxwos

    நா. ரஜினி ராமச்சந்திரன்

    பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன். ட்விட்டரில் என்னைப் பின்தொடர: @rajinirams

     
  • என். சொக்கன் 11:03 pm on November 30, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் 

    சமீபத்தில் ஓர் பழைய பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தபோது கவிஞர் கண்ணதாசனின் வசனம் என் கவனத்தை ஈர்த்தது.  

    “ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி” 

    கவியரசு கண்ணதாசனின் ஓர் மிகச் சிறப்பான அம்சம் எல்லா மதங்களையும் மதிக்கும் மனப்பாங்கு – இந்த முதிர்ச்சி எல்லோருக்கும் வருவதில்லை. மதத்தின் பரந்த அறிவுமுதிர்ச்சி மற்றைய மத நூல்களையும் படிப்பதனால் ஏற்படுகிற தெளிவு. அவருடைய கொள்கையில் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு சிற்றாறு.. சிற்றாறுகள் சேர்ந்து உருகவாக்குவது ஒரு மகா நதி.

    நாஸ்திகனாக இருந்து கண்ணனின் தாசனாக மாறிய முத்தையா தனது பாடல்களில் காட்சிக்கு தகுந்தவாறு மற்றைய மத கோட்பாடுகளையும் தாரளமாக அள்ளித் தெளிப்பது வழக்கம்.  இந்த வகையில் மேலே குறிப்பிட்ட வசனம் கிறிஸ்தவ விவிலிய நூலில் (Holy Bible) இருந்து எடுக்கப்பட்டது.

    இயேசு நாதருக்கும் ஓர் பெரிய பணக்காரனுக்கும் இடையே நடக்கும் சம்பவம், மேற்கோளின் சுருக்கமான பின்னணி: (லூக்கா 18:18-25)

    பணக்காரன்: இயேசு நாதரே! நான் நித்திய வாழ்வை (Eternal life) பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்”

    இயேசு நாதர்: நீ பத்துக் கட்டளைகளையும் கடைப் பிடிக்கிறாயா?

    பணக்காரன்:  ஓ! நான் சிறுவயது முதல் இந்த கட்டளைகளை கடைப்பிடிக்கிறேன்

    இயேசு நாதர்: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறை உண்டு. உனக்கு உள்ள எல்லா ஆஸ்திகளையும் விற்று ஏழைகளுக்கு கொடு அப்போது உனக்கு பரலோகத்தில் பொக்கிஷம் உண்டாகும். அதற்கு பின் என்னைப் பின் பற்றி வா!

    இதைக்கேட்ட அந்த செல்வந்தன் மிகவும் துக்கமடைந்ததைப் பார்த்த இயேசு “ ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” என்றார்.

    இந்த சிறு சம்பாஷனை புதிய ஏற்பாட்டில் உள்ள முதல் 3  சுவிசேடகங்களும் குறிக்கின்றன. ஆங்கிலத்தில் இதை camel and the eye of the needle என்று பொதுவாக குறிப்பிடுவார்கள். நடக்கமுடியாத சம்பவத்தை விவரிப்பதற்கு இந்த வசனம் ஓர் எடுத்துக்காட்டு. கவியரசு கண்ணதாசன் இதை பண ஆசையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

    இப்போது இந்த திரைப் பாடலை கேட்டுப் பாருங்கள். அர்த்தம் புரியும்.

    திரைப்படம்: பணத்தோட்டம்(1963)

    பாடல்: குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்( மனத்தோடம் போதுமென்று)

    இசை: விஸ்வநாதன் -ராமமூர்த்தி

    பாடலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்

    பாடலின் சுட்டி:  http://www.youtube.com/watch?v=M1YnOtuff1c

    பிற்குறிப்பு: விவிலிய நூலின் ஒரு பகுதியான புதிய ஏற்பாடு (New Testament) கிரேக்க மூல மொழியில் இருந்து தமிழுக்கு முதன்முதலாக மொழி பெயர்க்கப்பட்டது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் இதன் மூன்றாவது புத்தகத்தை (லூக்கா சுவிசேடகம் – Gospel of Luke) தன்னுடைய பாணியில் யேசு காவியம் எனும் தலைப்பில் படைத்தது குறிபிடத்தக்கது.

    சபா- தம்பி

    சபா-தம்பி பிறந்து வளர்ந்தது இலங்கையில். கால் நூற்றாண்டு காலத்துக்குமுன்னால் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், தற்போது பெர்த் நகரத்தில் வசிக்கிறார். தமிழார்வம் ஏராளம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தில்மட்டுமே எழுதிவந்திருக்கிறார், கண்ணதாசனும் #4VariNoteம் தந்த ஊக்கத்தில் தமிழிலும் எழுதத் தொடங்கி, தொடர்ந்து எழுதிவருகிறார்.

    Twitter: @SabaThambi
     
    • kamala chandramani 11:44 am on December 1, 2013 Permalink | Reply

      மனிதனுக்கு காசு மீதுள்ள ஆசையைக் கண்ணதாசன் எத்தனை அழகாகச் சொல்லியுள்ளார்! விவிலிய நூலில் சொல்லியுள்ளவற்றை விளக்கியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. அனைவருக்கும் தெரியாத, இயேசுவுக்கும், பணக்காரனுக்கும் இடையே நடக்கும் சம்பவத்தை எழுதியதற்கு நன்றி.

    • amas32 3:18 pm on December 1, 2013 Permalink | Reply

      ஒரே நாலு வரி நோட்டில் ஒவ்வொரு பதிவாளரும் திரைப்பாடல்களின் நாலு வரிகளைக் கையாளும் விதம் அத்தனை வித்தியாசமாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. ஆனால் சொல்ல வரும் கருத்துக்கள் அத்தனையும் அருமை.

      நீங்கள் பாடல் வரிகளுக்கும் விவிலயக் கருத்துக்கும் உள்ள கனெக்ஷன் பற்றி சொல்லியிருப்பது அருமை 🙂

      amas32

    • Saba-Thambi 8:44 pm on December 1, 2013 Permalink | Reply

      நன்றி kamala chandramani, amas32
      உங்கள் பின்னோட்டங்கள் எப்போதுமே உற்சாகமுள்ளவை.

  • என். சொக்கன் 9:22 pm on November 30, 2013 Permalink | Reply  

    இசைத் தமிழ் நீர் செய்த அருஞ்சாதனை 

    • படம்: காதல் மன்னன்
    • பாடல்: மெட்டுத் தேடி
    • எழுதியவர்: வைரமுத்து
    • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    • பாடியவர்: எம். எஸ். விஸ்வநாதன்
    • Link: http://www.youtube.com/watch?v=N0XuO3alLV8
    மெட்டுத் தேடித் தவிக்குது ஒரு பாட்டு
    அந்தப் பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு
    அதைக் கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா?
    இல்லை விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா?

    மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா?

    இசைக்கு வரிகள் மேன்மை தருகின்றனவா? அல்லது வரிகளுக்கு இசையால் பெருமையா?

    தமிழின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் : கவிஞர் இணையை முன்வைத்துக் கேட்டால், கண்ணதாசனுக்கு விஸ்வநாதன் ஆதாரமா? அல்லது விஸ்வநாதனுக்குக் கண்ணதாசனா?

    இக்கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கவேண்டுமா? பட்டிமன்றம் பாணியில் “இரண்டும்” என்று சொல்லமுடியாதா?

    தமிழில் இசை கொண்டாடப்பட்ட அளவு கவிதை கொண்டாடப்படவில்லை என்பது என் ஆதங்கம். குறிப்பாக திரைப்பாடல் வரிகள்!

    மானே, தேனே மீட்டர் வரிகளைத் தாண்டியும், சொல்லப்போனால் அந்தக் கட்டாயங்களுக்குள்ளாகவே படச் சூழலுக்கு இசைந்தபடி நம் திரைக் கவிஞர்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவற்றைக் கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதைவிட, இதுவும் ஒரு கலை வடிவம் என ஏற்பதில் என்ன தயக்கம்?

    மற்ற கலைகளைப்போலவே இங்கும் பொழுதுபோக்கு உண்டு, உன்னதம் உண்டு, மொக்கைகளும் உண்டு. எல்லாவற்றையும் ரசிக்கும் மனம் இருக்கவேண்டுவதில்லை, வடிகட்டி வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம், எடுத்துக்கொள்ளவேண்டும்.

    ஏனெனில், மெட்டில்லாத பாட்டு, பாட்டில்லாத மெட்டு இரண்டையும்விட, மெட்டுடன் பாட்டு தனி சுகம். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்!

    தமிழின் அத்துணை திரைப் பாடலாசிரியர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி சொல்லி நாலு வரி நோட்டிலிருந்து விடை பெறுகிறேன் 🙂

    ***

    என். சொக்கன் …

    30 11 2013

    363/365

     
    • rajinirams 11:00 am on December 1, 2013 Permalink | Reply

      அருமை.”மானே,தேனே மீட்டர் வரிகளைத் தாண்டியும், சொல்லப்போனால் அந்தக் கட்டாயங்களுக்குள்ளாகவே படச் சூழலுக்கு இசைந்தபடி நம் திரைக் கவிஞர்கள் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவற்றைக் கம்பனோடும் இளங்கோவோடும் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதைவிட, இதுவும் ஒரு கலை வடிவம் என ஏற்பதில் என்ன தயக்கம்?” -உண்மையான வரிகள்.
      தமிழ் திரையுலகில் மெட்டுக்கு பாட்டும் சரி,பாட்டுக்கு மெட்டும் சரி பாடல் வரிகளை விழுங்காத இசைக்கு எப்போதும் வெற்றி தான்.இதை தான் வாலி ஓரிரு முறை மேடையில் “தங்க தட்டில் வைத்த சிங்க பால்”என்று சொல்லியிருக்கிறார்.மெட்டுக்கு பாட்டு இல்ல துட்டுக்கு தான் பாட்டு என்று நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.ஆனால் இது வரை என்னை ஆச்சர்யப்படுத்தியது கப்பலோட்டிய தமிழன் படத்திற்காக பாரதியாரின் பாடல்களுக்கு (“மெட்டுக்கு எழுதியது போலவே தோன்ற வைக்கும் “) இசையமைத்த திரு ஜி.ராமநாதன் அவர்கள் தான்.உண்மையிலேயே இசை மேதை. மேலும் பல இசையமைப்பாளர்களும் பாடல் வரிகள் வரும்போது அடக்கி வாசித்து பாடலுக்கும் கவிஞருக்கும் பெருமை தேடி தந்திருக்கிறார்கள்.
      பல நல்ல நல்ல பாடல்களை “நாலு வரி நோட்டில்” கொண்டு வந்து பரவசப்படுத்திய தங்களுக்கும் திரு ஜி.ராகவன்,திரு மோகனகிருஷ்ணன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் தங்கள் அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட amas32, Uma Chelvan இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.

    • amas32 7:06 pm on December 2, 2013 Permalink | Reply

      //ஏனெனில், மெட்டில்லாத பாட்டு, பாட்டில்லாத மெட்டு இரண்டையும்விட, மெட்டுடன் பாட்டு தனி சுகம். புரிந்தவர்கள் பாக்கியவான்கள்!//

      This is the crux of 4varinote!

      தினம் ஒரு பா #365 முடிந்தபோது ஒரு வெற்றிடம் தோன்றியது. நீங்கள் #4varinote ஆரம்பித்தப் பொழுதும் முதலில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு வரவில்லை. ஆனால் நீங்கள் செய்த இந்தப் பணி மகத்தானது. இப்பொழுது இருக்கும் கவிஞர்களை ரசிக்க சொல்லி கொடுத்தீர்கள். சங்ககாலப் பாடல்கள் ஒரு வகை என்றால் இன்றைய திரைப்பாடல்கள் இன்னொரு வகை.

      மேலும் மேலும் புகழ் பெற வாழ்த்துகள் 🙂

      amas32

  • என். சொக்கன் 12:08 am on November 30, 2013 Permalink | Reply  

    விருந்தினர் பதிவு: நான் கண்ணாடிப் பொருளல்லவா! 

    பாடல் : கண்ணாமூச்சி ஏனடா

    படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

    பாடலாசிரியர் :  வைரமுத்து

    இசை: எ.ஆர்.ரஹ்மான்

    பாடகர் : சித்ரா

    என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா ?

    எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா ?

    நெஞ்சின் அலை உறங்காதோ ?

    உன் இதழ் கொண்டு வாய்
    மூட வா என் கண்ணா…

    உன் இமைக் கொண்டு விழி
    மூட வா என் கண்ணா…

    உன் உடல் தான்
    என் உடையல்லவா….!

    காதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்டக் காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும். 

    இது ஒரு பெண் பாடும் பாடல். அவள் இன்னும் காதலில் விழவில்லை ஆனாலும் தன் அக்காவின் காதல் நிலை கண்டு பாடும் பாடல். பெண் மனம் ஒரு உணர்ச்சிக் குவியல். ஆணுக்கு எல்லாமே ஒரு விளையாட்டு. பெண்ணுக்குக் காதல் ஒரு சீரியஸ் மேட்டர். மீனைக் ஆற்றில் பிடித்துத் திரும்பி நீரிலேயே விட்டு விளையாடுவதைப் போல பெண்ணிடம் சீண்டி விளையாடுவது ஆணுக்குக் கை வந்த கலை. ஆனால் அவளுக்கோ மனதை பறிகொடுத்துவிட்டால் எல்லாமே அவன் தான்.

    “எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?” மிக முக்கியமான வரி. அவளே காதலன் பால் மயங்கி தனக்கென தனியாக எண்ணாமல் அவனைச் சார்ந்தே எண்ணத் தொடங்கிப் பிறகும் எனக்குத் தனியாக எண்ணங்கள் இல்லையா என்று கேட்பதில் நியாயமே இல்லை. ஆயினும் காதலனின் எண்ணங்களும் செயல்களும் அவள் உணர்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து நடக்கும்படி இருக்கவேண்டும் என்று அவள் நினைப்பதிலும் தவறேதும் இல்லை.

    நெஞ்சில் அடிக்கும் எண்ண அலைகள் கடலை விஞ்சும். அவன் எப்பொழுதும் என்னிடம் காதலுடன் இருப்பானா? வேறு பெண்ணைப் பார்த்து மயங்கி விடுவானோ? கடைசி வரை காதல் நிலைக்குமா? திருமணம் கைகூடுமா? நடுவில் கைவிட்டு விட்டுப் போய்விடுவானோ என்று ஆயிரத்தெட்டுக் கவலைகள்.

    இதில் தொடர்ந்து வரும் வரிகள் காதலன் எப்படி தன்னை சேர்ந்தவுடன் தான் தன் காதலுக்கே உத்தரவாதமே என்ற காதலி நினைக்கிறாள் என்ற பொருளில் வருகிறது. 

    //உன் உடல் தான்
    என் உடையல்லவா….!//
    நானே உன் உடையாக வேண்டும் -என்று சங்கத் தமிழ் வரிகள் நேரடியாக இல்லை! 
    ஆனால், நள வெண்பாவில் ஒன்று உள்ளது!

    —ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
    இருவர் எனும் தோற்றம் இன்றிப் – பொருவெங்
    கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
    புனற்கே புனல்கலந்தாற் போன்று—-

    அதாவது நளன்-தமயந்தி, ஒருவர் உடம்பில் ஒருவர் ஒதுங்குகிறார்கள். அதாவது ஒருத்தர், இன்னொருத்தரோட உடம்பாகவே ஆகிவிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் பாடல் வரிகளும் சொல்கின்றன.

    மிக அருமையான இசை. சித்ரா தன் தேன் குரலில் உணர்ச்சிப் பொங்கப் பாடியிருகிறார். அதற்கேற்பத் திரைப்படத்தில் ஐச்வர்யா ராயின் நடனமும், முக்கியமாக அஜித்தும் தபுவும் மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன பாணியில் காதல் பார்வை பார்த்துக் கொள்வதும் பாட்டுக்குப் பெருமை சேர்க்கிறது.
     
    youtube link for the song : http://www.youtube.com/watch?v=5ftMtHBgKTc
    நள வெண்பா உதவி KRS  

    சுஷிமா சேகர்

    பிறந்தது பாண்டிச்சேரியில், வளர்ந்தது சென்னையில். கலிபோர்னியாவில் பத்து வருடங்களும் சிங்கப்பூரில் மூன்று வருடங்களும் இருந்துவிட்டுத் தற்போது வசிப்பது சென்னையில். குழந்தைகள் பிறந்த பிறகு MBA படித்தேன். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. இணையத்துக்கு (டவிட்டருக்கு) வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதன் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களை எண்ணி மகிழ்கிறேன். இணையத்துக்கு வந்த பிறகுதான் தமிழ் பயில்கிறேன். நேசிப்பது என் தொழில், பொழுதுபோக்கு 🙂

    சுஷிமா சேகர் வலைப்பதிவு: http://amas32.wordpress.com/

     
    • rajinirams 10:32 am on November 30, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு.”வைர”வரிகளுக்கு பட்டை தீட்டியது போன்ற அருமையான விளக்கம்,உடல் தான் உடையல்லவா என்ற அற்புதமான வரிகளை நளவெண்பா வரிகளுடன் எடுத்துக்காட்டி நல்ல பதிவை தந்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள். “உன் இமை கொண்டு விழி மூடவா” வரிகள் வாலியின் வரிகளை நினைவு படுத்தும்- இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ-இருக்கின்ற சுகம் வாங்க தடை போடவோ,மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ….

      • amas32 9:35 pm on November 30, 2013 Permalink | Reply

        மிக்க நன்றி. You are a connoisseur of 4varinote. So any appreciation from you is a big honour, thank you 🙂

        amas32

    • B.MURUGAN 11:21 am on November 30, 2013 Permalink | Reply

      அருமை, யாராவது சிலாகித்து சொல்லும்போதுதான் அந்த பாடலின, பாடல் வரிகளின் மகத்துவம் புரிகிறது

    • umakrishh 11:24 am on November 30, 2013 Permalink | Reply

      ஹா..பெண்ணின் மனதை உணர்ந்து எழுதிய,பாடியவங்களுக்கு கௌரவம் சேர்க்கும் விதமாக உணர்ந்து எழுதி இருக்கீங்க 🙂
      //காதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்டக் காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.//
      முற்றிலும் உண்மை :))
      இப்படத்தில் எங்கே எனது கவிதையும் நல்லதொரு உருக்கமான பாடல்

      • amas32 9:33 pm on November 30, 2013 Permalink | Reply

        உண்மை தான் உமா, நன்றி 🙂

        amas32

    • kamala chandramani 11:42 am on November 30, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    • pvramaswamy 11:42 am on November 30, 2013 Permalink | Reply

      Excellent choice of song. The lyrics, tune, singing style, and, all very well picturised. Aishwaya Rai, apart from her being the “Miss World”, was a model too. That is very visible in graceful movements in this song (and the songs in ‘iruvar’). You have a superb taste. I wanted to write about this song, but avoided, as I could be accused of being carried away… Yeah, I went to you tube once again! 🙂

      Now about your writing. Good style, good flow. Direct. As usual. You seem to have a thin layer of suspicion about the ‘ரொம்பவே பாவம்’ men. Luckily you have not been elected as the Chairma… sorry Chairperson of Indian Women’s Fedration! 😉

      • amas32 9:31 pm on November 30, 2013 Permalink | Reply

        Thank you PVR 🙂 So happy to see your comment 🙂 This song is got a wholesomeness like the Thillaana Mohanambal’s மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன, ஆனால் இக்காலத்திற்குடையது. நன்றி!

        amas32

        • to_pvr 9:54 pm on November 30, 2013 Permalink

          Yes.

    • Uma Chelvan 6:04 pm on November 30, 2013 Permalink | Reply

      Excellent write up !!!

      உங்க postம் commentsம் எப்பொழுதுமே மிகவும் நன்றாக இருக்கும். படிக்கும் காலத்தில், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் நல்ல மாணவியாக இருந்து இருபீங்கனு நினைக்கிறேன். Though I don’t have an account, I regularly follow you in Twitter, மிகவும் மென்மையான போக்கு, அனைவரயும் மனம் திறந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் ……..God Bless you and My best wishes for your Kids especially for your Daughter for a bright and Beautiful Future…

      “A Happy person is not a person in a certain set of circumstances, but rather a person with a certain set of Attitudes “……….Hugh Downs

      • amas32 9:26 pm on November 30, 2013 Permalink | Reply

        Thank You Uma Chelvan. I always wondered who you were as you are not on twitter. Happy to know you through this blog site. Your comments are always very distinctive and your song links a welcome and picturesque interlude 🙂 Thank you so much for your kind words. I wish you the very best in everything. I have a great admiration for doctors and their yeomen service.

        amas32

        • Uma Chelvan 10:36 pm on November 30, 2013 Permalink

          Thank you very much amas 32. With my busy schedule (if you look at the time, I post my comments are mostly around 2:00 AM) I cannot cope with the speed of twitter, might be easier after a while ??:). I am on Facebook, not active now a days though. Finally I found a “Niche” here. Thank you very much for your appreciation on my comments. Couple of times, I was baffled by twitter people ‘s comments. I know how to easily ignore/avoid people, some times unwanted/ unnecessary comments will make you to look inside. It is Very nice know you too.!!!!!!:) . .

    • Saba-Thambi 8:46 pm on December 1, 2013 Permalink | Reply

      அருமையான பதிவு!

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel