விருந்தினர் பதிவு: நான் கண்ணாடிப் பொருளல்லவா!
பாடல் : கண்ணாமூச்சி ஏனடா
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை: எ.ஆர்.ரஹ்மான்
பாடகர் : சித்ரா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா ?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா ?
நெஞ்சின் அலை உறங்காதோ ?
உன் இதழ் கொண்டு வாய்
மூட வா என் கண்ணா…
உன் இமைக் கொண்டு விழி
மூட வா என் கண்ணா…
உன் உடல் தான்
என் உடையல்லவா….!
காதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்டக் காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.
இது ஒரு பெண் பாடும் பாடல். அவள் இன்னும் காதலில் விழவில்லை ஆனாலும் தன் அக்காவின் காதல் நிலை கண்டு பாடும் பாடல். பெண் மனம் ஒரு உணர்ச்சிக் குவியல். ஆணுக்கு எல்லாமே ஒரு விளையாட்டு. பெண்ணுக்குக் காதல் ஒரு சீரியஸ் மேட்டர். மீனைக் ஆற்றில் பிடித்துத் திரும்பி நீரிலேயே விட்டு விளையாடுவதைப் போல பெண்ணிடம் சீண்டி விளையாடுவது ஆணுக்குக் கை வந்த கலை. ஆனால் அவளுக்கோ மனதை பறிகொடுத்துவிட்டால் எல்லாமே அவன் தான்.
“எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?” மிக முக்கியமான வரி. அவளே காதலன் பால் மயங்கி தனக்கென தனியாக எண்ணாமல் அவனைச் சார்ந்தே எண்ணத் தொடங்கிப் பிறகும் எனக்குத் தனியாக எண்ணங்கள் இல்லையா என்று கேட்பதில் நியாயமே இல்லை. ஆயினும் காதலனின் எண்ணங்களும் செயல்களும் அவள் உணர்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து நடக்கும்படி இருக்கவேண்டும் என்று அவள் நினைப்பதிலும் தவறேதும் இல்லை.
நெஞ்சில் அடிக்கும் எண்ண அலைகள் கடலை விஞ்சும். அவன் எப்பொழுதும் என்னிடம் காதலுடன் இருப்பானா? வேறு பெண்ணைப் பார்த்து மயங்கி விடுவானோ? கடைசி வரை காதல் நிலைக்குமா? திருமணம் கைகூடுமா? நடுவில் கைவிட்டு விட்டுப் போய்விடுவானோ என்று ஆயிரத்தெட்டுக் கவலைகள்.
இதில் தொடர்ந்து வரும் வரிகள் காதலன் எப்படி தன்னை சேர்ந்தவுடன் தான் தன் காதலுக்கே உத்தரவாதமே என்ற காதலி நினைக்கிறாள் என்ற பொருளில் வருகிறது.
—ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவர் எனும் தோற்றம் இன்றிப் – பொருவெங்
கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று—-
அதாவது நளன்-தமயந்தி, ஒருவர் உடம்பில் ஒருவர் ஒதுங்குகிறார்கள். அதாவது ஒருத்தர், இன்னொருத்தரோட உடம்பாகவே ஆகிவிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் பாடல் வரிகளும் சொல்கின்றன.
சுஷிமா சேகர்
பிறந்தது பாண்டிச்சேரியில், வளர்ந்தது சென்னையில். கலிபோர்னியாவில் பத்து வருடங்களும் சிங்கப்பூரில் மூன்று வருடங்களும் இருந்துவிட்டுத் தற்போது வசிப்பது சென்னையில். குழந்தைகள் பிறந்த பிறகு MBA படித்தேன். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. இணையத்துக்கு (டவிட்டருக்கு) வந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. அதன் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களை எண்ணி மகிழ்கிறேன். இணையத்துக்கு வந்த பிறகுதான் தமிழ் பயில்கிறேன். நேசிப்பது என் தொழில், பொழுதுபோக்கு 🙂
சுஷிமா சேகர் வலைப்பதிவு: http://amas32.wordpress.com/
rajinirams 10:32 am on November 30, 2013 Permalink |
அருமையான பதிவு.”வைர”வரிகளுக்கு பட்டை தீட்டியது போன்ற அருமையான விளக்கம்,உடல் தான் உடையல்லவா என்ற அற்புதமான வரிகளை நளவெண்பா வரிகளுடன் எடுத்துக்காட்டி நல்ல பதிவை தந்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள். “உன் இமை கொண்டு விழி மூடவா” வரிகள் வாலியின் வரிகளை நினைவு படுத்தும்- இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ-இருக்கின்ற சுகம் வாங்க தடை போடவோ,மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ….
amas32 9:35 pm on November 30, 2013 Permalink |
மிக்க நன்றி. You are a connoisseur of 4varinote. So any appreciation from you is a big honour, thank you 🙂
amas32
B.MURUGAN 11:21 am on November 30, 2013 Permalink |
அருமை, யாராவது சிலாகித்து சொல்லும்போதுதான் அந்த பாடலின, பாடல் வரிகளின் மகத்துவம் புரிகிறது
amas32 7:07 pm on December 2, 2013 Permalink |
நன்றி 🙂
amas32
umakrishh 11:24 am on November 30, 2013 Permalink |
ஹா..பெண்ணின் மனதை உணர்ந்து எழுதிய,பாடியவங்களுக்கு கௌரவம் சேர்க்கும் விதமாக உணர்ந்து எழுதி இருக்கீங்க 🙂
//காதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்டக் காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.//
முற்றிலும் உண்மை :))
இப்படத்தில் எங்கே எனது கவிதையும் நல்லதொரு உருக்கமான பாடல்
amas32 9:33 pm on November 30, 2013 Permalink |
உண்மை தான் உமா, நன்றி 🙂
amas32
kamala chandramani 11:42 am on November 30, 2013 Permalink |
அருமையான பதிவு. வாழ்த்துகள்.
amas32 9:31 pm on November 30, 2013 Permalink |
Thank you ma 🙂
amas32
pvramaswamy 11:42 am on November 30, 2013 Permalink |
Excellent choice of song. The lyrics, tune, singing style, and, all very well picturised. Aishwaya Rai, apart from her being the “Miss World”, was a model too. That is very visible in graceful movements in this song (and the songs in ‘iruvar’). You have a superb taste. I wanted to write about this song, but avoided, as I could be accused of being carried away… Yeah, I went to you tube once again! 🙂
Now about your writing. Good style, good flow. Direct. As usual. You seem to have a thin layer of suspicion about the ‘ரொம்பவே பாவம்’ men. Luckily you have not been elected as the Chairma… sorry Chairperson of Indian Women’s Fedration! 😉
amas32 9:31 pm on November 30, 2013 Permalink |
Thank you PVR 🙂 So happy to see your comment 🙂 This song is got a wholesomeness like the Thillaana Mohanambal’s மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன, ஆனால் இக்காலத்திற்குடையது. நன்றி!
amas32
to_pvr 9:54 pm on November 30, 2013 Permalink
Yes.
Uma Chelvan 6:04 pm on November 30, 2013 Permalink |
Excellent write up !!!
உங்க postம் commentsம் எப்பொழுதுமே மிகவும் நன்றாக இருக்கும். படிக்கும் காலத்தில், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் நல்ல மாணவியாக இருந்து இருபீங்கனு நினைக்கிறேன். Though I don’t have an account, I regularly follow you in Twitter, மிகவும் மென்மையான போக்கு, அனைவரயும் மனம் திறந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் ……..God Bless you and My best wishes for your Kids especially for your Daughter for a bright and Beautiful Future…
“A Happy person is not a person in a certain set of circumstances, but rather a person with a certain set of Attitudes “……….Hugh Downs
amas32 9:26 pm on November 30, 2013 Permalink |
Thank You Uma Chelvan. I always wondered who you were as you are not on twitter. Happy to know you through this blog site. Your comments are always very distinctive and your song links a welcome and picturesque interlude 🙂 Thank you so much for your kind words. I wish you the very best in everything. I have a great admiration for doctors and their yeomen service.
amas32
Uma Chelvan 10:36 pm on November 30, 2013 Permalink
Thank you very much amas 32. With my busy schedule (if you look at the time, I post my comments are mostly around 2:00 AM) I cannot cope with the speed of twitter, might be easier after a while ??:). I am on Facebook, not active now a days though. Finally I found a “Niche” here. Thank you very much for your appreciation on my comments. Couple of times, I was baffled by twitter people ‘s comments. I know how to easily ignore/avoid people, some times unwanted/ unnecessary comments will make you to look inside. It is Very nice know you too.!!!!!!:) . .
Saba-Thambi 8:46 pm on December 1, 2013 Permalink |
அருமையான பதிவு!
amas32 7:09 pm on December 2, 2013 Permalink |
நன்றி 🙂
amas32
#4varinote: நான் கண்ணாடிப் பொருளல்லவா! | amas32 7:24 pm on December 4, 2013 Permalink |
[…] Link to the published post: https://4varinote.wordpress.com/2013/11/30/guest43/ […]