விருந்தினர் பதிவு: இரட்டைப் பிறவிகள்
தாமரை இலை-நீர் நீதானா?
தனியொரு அன்றில் நீதானா?|
புயல் தரும் தென்றல் நீதானா?
புதையல் நீதானா?
தனியொரு அன்றில் நீதானா?|
புயல் தரும் தென்றல் நீதானா?
புதையல் நீதானா?
பாடல்: கருகரு விழிகளால்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்: கார்த்திக்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்: கார்த்திக்
தலைவன் தலைவியை மையப்படுத்தி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் வந்திருக்கும். சில திரைப்பாடல்களிலும் உவமையாக அவ்வப்போது தலை காட்டுவது வழக்கம். தாமரை இலை-நீர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த உவமை. (ஒட்டியும்-ஒட்டாமலும்)
தனியொரு அன்றில் என்றால்?
இதற்கும் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அன்றில் என்பது ஓருடல்-இருதலையாக வாழும் பறவை என்று பஞ்சதந்திரக்கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சங்ககாலப் பாடல்களில், இணைபிரியாதிருக்கக் கூடிய பறவைகள் என்கிற அர்த்தத்தில் (இரண்டில் ஒன்று இறந்தால், மற்றொன்று(ம்) இறக்கும். அல்லது சோகத்தோடு வாழும் ) பாடல்கள் உள்ளன.
அன்றில் போல் ‘புன்கண் வாழ்க்கை’ வாழேன் (நற்றிணை-124 | மோசிகண்ணத்தனார்)
கவிஞர் வைரமுத்து கூட, ஒரு பாடலில் (கண்ணோடு காண்பதெல்லாம்/ஜீன்ஸ்/ ஏ.ஆர்.ரஹ்மான்)
“அன்றில் பறவை ரெட்டைப்பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே..விட்டுப்பிரியாதே”
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே..விட்டுப்பிரியாதே”
என்று எழுதியிருக்கிறார்.
சாத்தியமோ, இல்லையோ ஆனால் (இணை) பிரியாத வரம் வேண்டும்தானே?
தமிழ்
நான் தமிழ். @iamthamizh என்கிற பெயரில் ட்விட்டரில் எழுதுகிறேன்.
பயணப்படுதலும் அதன் சுவாரசியங்களும் மிகப் பிடிக்கும். பயணப்படுதலின் பொருட்டு பாடல்கள் கேட்கத் துவங்கிய இப்போது அவை குறித்து எழுதியும் வருகிறேன்.
பார்க்க:
rajinirams 10:14 am on November 11, 2013 Permalink |
சங்கப்பாடல்,திரைப்பாடல் கொண்டு “அன்றில் பறவை”யின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு-வாழ்த்துக்கள் “தமிழ்”.
amas32 7:18 pm on November 11, 2013 Permalink |
“அன்றில் பறவை” பாட்டில் கேட்டிருந்தும் கவனித்து அர்த்தம் யோசித்ததில்லை. நல்ல ர்டுத்துக்காட்டுக்களுடன் விளக்கி உள்ளீர்கள் 🙂
சங்க இலக்கியங்களில் தான் எவ்வளவு இருக்கின்றன! படித்துப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.
நன்றி
amas32
நாலு வரியில் நான்! | தமிழ் 7:23 pm on January 29, 2014 Permalink |
[…] வேண்டும்தானே? (நாலுவரி நோட்டு – நவம்பர்-10-2013) இத்தோடு கதை நிற்கவில்லை! இன்னொரு […]