ஒரு ’கமா’க் கட்டுரை
- படம்: உலகம் சுற்றும் வாலிபன்
- பாடல்: அவள் ஒரு நவரச நாடகம்
- எழுதியவர்: கண்ணதாசன்
- இசை: எம். எஸ். விஸ்வநாதன்
- பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
- Link: http://www.youtube.com/watch?v=_JDAiNMowaE
அவள் ஒரு நவரச நாடகம்,
ஆனந்தக் கவிதையின் ஆலயம்,
தழுவிடும் இனங்களில் மானினம்,
தமிழும் அவளும் ஓரினம்!
ஆங்கிலத்தில் எந்த இரண்டு சொற்களை இணைத்துப் பட்டியல் போட்டாலும், நடுவில் ஒரு கமா (காற்புள்ளி) அல்லது ‘and’ என்ற சொல்லைச் சேர்க்கிறோம். உதாரணமாக: Ram and Laxman அல்லது Ram, Laxman.
இதை அப்படியே தமிழுக்கும் நீட்டி, இப்படி எழுதுகிறோம்: ராம் மற்றும் லட்சுமணன் அல்லது ராம், லட்சுமணன்.
ஆனால் இந்த இரண்டு தவிர, தமிழில் மூன்றாவதாக இன்னொரு வகையும் உண்டு. பட்டியலில் உள்ள சொற்களுடன் ‘உம்’ சேர்த்து எழுதுவது. இப்படி: ராமனும் லட்சுமணனும்.
இலக்கணத்தில் இதனை ‘எண்ணும்மை’ என்கிறார்கள். அதாவது, ராமன், லட்சுமணன் என்று எண்ணுகிற ‘உம்’மை. உதாரணமாக: நானும் அவனும், சந்திரனும் சூரியனும், பூவும் காயும்…
இப்படி எங்கெல்லாம் ‘எண்ணும்மை’ வருகிறதோ, அங்கெல்லாம் நடுவில் காற்புள்ளி சேர்க்க வேண்டியதில்லை, ‘மற்றும்’ என்ற சொல்லும் வேண்டியதில்லை. இதையெல்லாம் அந்த ‘உம்மை’ பார்த்துக்கொள்கிறது. ‘தமிழும் அவளும் ஓரினம்’ என்று எழுதினால் போதும், ‘தமிழும், அவளும் ஓரினம்’ என்று கமா போட்டு எழுதவேண்டியதில்லை.
***
என். சொக்கன் …
31 10 2013
333/365
amas32 9:45 pm on November 1, 2013 Permalink |
நீங்களும் நாலு வரி நோட்டும் மாதிரி :-))
amas32