கொண்டாட்டம்!

  • படம்: தாய் சொல்லைத் தட்டாதே
  • பாடல்: காட்டுக்குள்ளே திருவிழா
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்: பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=syqEFuG-i6o

காட்டுக்குள்ளே திருவிழா,

கன்னிப்பொண்ணு மணவிழா,

சிரிக்கும் மலர்கள் தூவி

சிங்காரிக்கும் பொன்விழா!

கொண்டாட்டங்கள் சிலவற்றை நாம் திருவிழா என்கிறோம் (உதாரணம்: பொங்கல் திருவிழா), இன்னும் சிலவற்றைப் பண்டிகை என்கிறோம் (உதாரணம்: விநாயக சதுர்த்திப் பண்டிகை).

இவற்றை மாற்றிச் சொல்வதும் சகஜம்தான். தீபாவளித் திருவிழா, தீபாவளிப் பண்டிகை என்று ஒரே விஷயத்தைக் குறிப்பிட இந்த இரு சொற்களையும் பயன்படுத்துவதுகூட உண்டு.

நிஜத்தில் இந்த இரு சொற்களுக்கும் என்ன வித்தியாசம்? எதை எப்போது பயன்படுத்தவேண்டும்?

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் இந்தப் புதிருக்கு அழகான விடை சொல்கிறார்: வீட்டுக்குள் கொண்டாடுவது பண்டிகை, வீட்டுக்கு வெளியே கொண்டாடுவது திருவிழா.

அப்படியானால், இந்தக் கன்னிப் பெண்ணின் திருமணம், பண்டிகையா, அல்லது திருவிழாவா?

***

என். சொக்கன் …

06 09 2013

279/365