விருந்தினர் பதிவு : பூங்காற்று

காற்று தெரியும்.. பஞ்ச பூதங்களில் ஒன்று.. காற்று வாங்கப் போகையில் கவிதை வாங்கி வந்த பாடல் எல்லாம் உண்டு..

மென்மையான காற்று தென்றல்.. ஆக்ரோஷமான காற்று புயல்..

அது என்ன பூங்காற்று?

இன்னும் மென்மையான காற்றா..?

ஒரு பாடலில் ‘பூமேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா’ என வ்ருகிற்து..

இன்னொரு அழகிய பாடல வித் வொர்ஸ்ட் பிக்சரைசேஷன்.. ‘மாந்தளிரே மயக்கமென்ன உன்னை பூந்தென்றல் தீண்டியதோ..’ ஜானகி என நினைக்கிறேன்..

பூந்தென்றலாய் காதுகளுக்குள் வருடும் அது.. பூந்தென்றல் வேறு, பூங்காற்று வேறா.?

இல்லையாம்.. பூக்களின் மணம்கமழும் மெல்லிய காற்று.. மெல்லிய தென்றல்.. இதானாம்..

என்னவெல்லாம் பாடியிருக்கிறார்கள்..

ஏரிக்கரைப் பூங்காற்றே நீ போற வழி தென்கிழக்கோ?

பூங்காற்று திரும்புமா? என் பாட்டை விரும்புமா?

பூங்காற்று புதிதானது, புது வாழ்வு சதிராடுது..

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா.. நீ கேட்டுப் பாராட்டு, ஓ மன்னவா!

இப்போதும் கொஞ்சம் நினைவுகளை மயக்கம்கொள வைக்கும்.. ‘இளமை எனும் பூங்காற்று’ பாட்டு

பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்..

பூங்காற்று உன் பேர் சொல்ல, கேட்டேனே இன்று..

சுடும் பூங்காற்றே, சுட்டுப் போகாதே..

பூந்தென்றல் காற்றே வா! … இன்னும் நிறைய இருக்கலாம்!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பூங்காற்று என்ற வார்த்தை கலந்திருக்கும் பாடல்களும் அதைப்போலவே மென்மையாக மெலடியஸாக இருக்கின்றன..

திரைப்பாடல் எழுத வாய்ப்புக் கிடைத்தால் பூங்காற்றை வைத்துக் குத்துப்பாட்டு எழுத முயற்சி செய்யலாம் என நினைக்கிறேன்.. அப்போதும், குத்துப்பாடல் அதன் தன்மை மறந்து மென்மையாகி விடுமோ?

நிறைவாக…

அதிஅதி காலையில் மலர்கள் மலர்ந்திருக்கும் பூஞ்சோலையில் இந்தக்காலத்திற்கு ஏற்றாற்போல முக்கால் பர்முடாஸ், அடிடாஸ் டீஷர்ட்டும், அழகான ரிபோக் ஷீவும், காதுகளில் ஐபாடின் ஸ்பீக்கரும் பொருத்தியபடியே வேகமாக நடக்கும்போது நம்மீது மோதும் பூங்காற்று எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

சொர்க்கம் சார்!

சின்னக் கண்ணன்

என்னைப் பற்றி முன்னுரையா? குட்டி பத்து பைசா ஸ்டாம்ப்பின்னால் எழுதிவிடலாம்.. பிறந்து வளர்ந்து நான்கு கழுதைகள் வயதாகிறது.. சின்னதாகத் தமிழ்மீது ஆசை.. எழுதி எழுதிப் பார்க்க, வருவேனா என கோபித்துக்கொண்டிருக்கிறது தமிழ்!

இருபத்தைந்து வருடங்களாக இருந்தது, இருப்பது அன்னிய தேசம்தான், தற்சமயம் ஜாகை மஸ்கட்!

http://brindavanam.blogspot.com