விருந்தினர் பதிவு: திருக்குறளும் கண்ணதாசனும்

திரைப்பாடல்களில் இலக்கியத்தையும் தத்துவத்தையும் எளிமையாக சொன்னவர் கண்ணதாசன். திருக்குறள் சொன்ன வாழ்வியல் முறைகளை அழகாய் பல பாடல்களில் சேர்த்து கோர்த்துக் கொடுத்திருக்கிறார்.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

இதற்கு விளக்கம் எழுதிய மற்ற உரையசிரியர்கள் எல்லாம் ‘மயிர்நீப்பின்’ ‘உயிர்நீப்பின்’ வார்த்தைகளை சுற்றியே விளக்கங்களை அமைக்கின்றனர். ஆனால் கண்ணதாசன் எளிமையாய் ஒரு Positive கோணத்தில் விளக்கம் சொல்கிறார்.

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா

இன்னொரு குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

பரிமேலழகரும் மணக்குடவரும் சாலமன் பாப்பையாவும் இல்லற வாழ்க்கையை சரியாக வாழ்பவன் என்பது போல் உரை அமைக்கின்றனர். கலைஞரும் முவவும் பொதுவான அறநெறி பற்றி உரை அமைக்கின்றனர். ஆனால் கண்ணதாசன் வழக்கில் இருக்கும் சாதாரண வார்த்தைகளை வைத்து விளக்கம் சொல்கிறார்

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா

வாழ்வாங்கு வாழ்பவன் என்பதை ‘நேராக வாழ்பவர்’ என்று சொல்வது Straight-forward ன் தமிழாக்கம்

இந்த வரிகள் இடம்பெற்ற பாடல், ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ (வேட்டைக்காரன்) http://www.youtube.com/watch?v=09EBJA1eTU4

நா. மோகன கிருஷ்ணன்

(@mokrish in twitter)