விருந்தினர் பதிவு: கண்ணனும் தாசனும்

காக்கை சிறகிலும் பார்க்கும் மரங்களிலும் கேட்கும் ஒலிகளிலும் மட்டுமில்லாமல் எதை பார்த்தாலும் கண்ணதாசனுக்கு கண்ணனே தோன்றியிருக்க வேண்டும். ‘கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே என்று எப்பொழுதும் கண்ணன் நினைவே.

யோசித்து பாருங்கள். ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ஆண்டாள். அவளுக்கு பூர்வ ஜன்ம நினைவுகள் வந்தது போல கதையமைப்பு. ஆனால் பார்ப்பவர்களுக்கு அவள் புத்தி சுவாதீனம் இல்லாத பெண் . ஒரு நாள் இரவில் அவள் வெள்ளை ஆடை உடுத்தி அங்கும் இங்கும் அலைந்தபடி நாதனை  நினைத்து ஏங்கி பாட வேண்டிய பாடல் காட்சி.   படம் (உத்தரவின்றி உள்ளே வா ) நகைச்சுவை ரகம்.  காட்சி பேய் போல் பெண் உலாவும் தோற்றம். கண்ணதாசன் என்ன எழுதுகிறார்?

     ‘தேனாற்றங்கரையினிலே தேய் பிறையின் இரவினிலே’  t
      மோகினிபோல் வந்தேன் நாதா
என்ற பாடலில் (http://www.youtube.com/watch?v=QTuVHVI6LAY) ‘கோவில் மாலையிட்டு கொண்டாட நினைத்திருந்தேன்’ என்று ஆண்டாள் மண நாள் பற்றி ‘சொல்லி ஏங்கும் வரிகள். பின் கலிங்கத்து போரில் வெற்றி கொண்ட நாயகன் திரும்பி வந்தவுடன் திருமண நாள் குறிக்கிறார். அவர் சொல்லும் திருநாள்  – ‘ஆவணி ரோகிணி  அஷ்டமி நேரத்தில்  மாலை தந்தாய்’
இந்த நாளின் சிறப்பு? இது கண்ணனின் பிறந்த நாள்! அதுதான் கண்ணதாசன்!
நா . மோகன கிருஷ்ணன்
(@mokrish in Twitter)