விருந்தினர் பதிவு : எண்ணும் எழுத்தும்
எண்களை வைத்து எழுதப்பட்ட பாடல்கள் ஏராளம். திருவிளையாடலில் வரும் ஒவ்வை பாடிய ‘ஒன்றானவன்’ முதல் மாதுரி தீட்சித் ஆடிய ஏக் தோ தீன் வரை பிரபலமான பாடல்கள் பலவற்றில் எண்கள் பாடல் வரிகளின் அடித்தளமாக வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் கண்ணதாசன் அதை உபயோகித்த விதம் அற்புதம்.
கலை கோவில் படத்தில் வரும் ‘நான் உன்னை சேர்ந்த செல்வம் ‘ P B ஸ்ரீநிவாஸ் P சுசீலா குரலில் இந்த பாடலில்
உன் அச்சம் நாணம் என்ற நாலும்
என் அருகில் வந்தவுடன் அஞ்சும்
இதழ் பருகும்பொது நெஞ்சம் ஆறும்
அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்
நாலும் ஏழும் எண்களாய் ஆனால் அஞ்சும் ஆறும் அழகான அர்த்தங்களை கொடுத்து … ஆஹா. இன்னொரு பாடலில் இந்த இரண்டு எண்கள் மறுபடியும்… இது சத்தியம் படத்தில் வரும் ‘சரவண பொய்கையில் நீராடி’
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் கண்ட இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
காதலில் சொன்னதை கடவுளை பற்றியும் சொல்லி கண்ணதாசன் செய்யும் வித்தை
http://www.hummaa.com/music/album/ithu-sathiyam/13848
நான் நா மோகனகிருஷ்ணன். படிப்பு B.Com FCA. இந்த ஏப்ரல் மாதத்தில் பொன் விழா வயதை பெருமையாக கொண்டாடினேன். I turned 25 for a second time! என் மனைவியும் இரண்டு மகன்களுமே என் முதல் நண்பர்கள்
சென்னையில் தொடங்கி பிறகு ஜகர்த்தாவில் சில வருடங்கள் பின் வளைகுடா வாழ் தமிழனாய் சில வருடங்கள். இப்போது மறுபடியும் சென்னை வாசி. வேலூர் போன்ற ஒரு small town ல் சினிமா பார்த்து, விவித் பாரதி யும் இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் ஆசிய சேவையில் திரை இசை பாடல் கேட்டு , தெருவில் கிரிக்கெட் விளையாடி, வளர்ந்தவான். படிக்க பிடிக்கும் – ஆங்கிலம் தமிழ் இரண்டும். In 2012, I wanted to read a book a week. Hope I have managed about 80% adherence
இசை பிடிக்கும் – தமிழ் திரை இசை மிகவும் பிடிக்கும். MSV -கண்ணதாசன் Combo பாடல்கள் மிகவும் பிடிக்கும். ipod ல் 8000 பாடல்கள் MSV முதல் வித்யாசாகர் வரை – கேட்டுகொண்டே நடக்க பிடிக்கும். கோவில்கள் போக பிடிக்கும். தமிழ் இலக்கியம் பக்தி சார்ந்து இருப்பதை ரசிப்பவன்.
அரசியல், நாட்டு நடப்பு , சினிமா கிரிக்கெட் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் உண்டு
arvenky 10:54 am on December 18, 2012 Permalink |
செம்ம செம்ம 🙂
Prasannaa S (@tcsprasan) 12:57 pm on December 18, 2012 Permalink |
Very Nice one 🙂 அருமை. கண்ணதாசன் கண்ணதாசந்தான்…
amas32 (@amas32) 10:36 pm on December 18, 2012 Permalink |
திரு மோகன கிருஷ்ணன், உங்களைப் பற்றிய bio is very interesting 🙂
கண்ணதாசனின் இந்த வரிகள் எனக்கு மிகவும் விருப்பமானவை 🙂
//அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் கண்ட இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை//
amas32
Niranjan 9:49 am on December 19, 2012 Permalink |
மொழி ஆளுமை, கருத்து ஆளுமை இரண்டுமே ஒரு சேரப் பெற்ற , கலைமகள் கடாட்சம் பெற்ற கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அதற்கு இந்தப் பாடல் ஒரு சிறந்த உதாரணம். இந்தப் பாடலில் எண்கள் அழகாகக் கையாளப்பட்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், என்னை மிகவும் கவர்ந்தது இந்தப் பாடலின் பல்லவியில் வரும் வரி தான். அது ” ….. என்ன சொல்ல வேண்டும், நம் இளமை வாழ வேண்டும்” என்பது தான். இந்த இளமை வாழ வேண்டும் என்பது எளிமையாக இருந்தாலும் எத்துணை பெரிய விஷயத்தை உள்ளடக்கி வைத்திருக்கிறது. கண்ணதாசன் கண்ணதாசன் தான். கண்ணதாசனின் எண்ணதாசன் நான். வாழ்க அவர் புகழ்.